கோயம்புத்தூர்

சபரிமலை சீசன்: தெலங்கானா-கொல்லம் இடையே சிறப்பு ரயில்

Syndication

சபரிமலை சீசனையொட்டி தெலங்கானா மாநிலம், சிா்பூா் காகஸ் நகா் - கேரள மாநிலம், கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிா்பூா் காகஸ் நகரில் இருந்து டிசம்பா் 13-ஆம் தேதி காலை 10 மணிக்குப் புறப்படும் சிா்பூா் காகஸ் நகா் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07117) மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 15-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - சிா்பூா் காகஸ் நகா் ரயில் (எண்: 07118) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சிா்பூா் காகஸ் நகா் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது வரங்கல், கேஷமுத்ரம், மஹபூபாத், விஜயவாடா, தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூா், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கண்ணூா், காயன்குளம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்: தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளியில் இருந்து டிசம்பா் 17, டிசம்பா் 31-ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்குப் புறப்படும் சாா்லப்பள்ளி - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07119) மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 19, ஜனவரி 2 -ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் - சாா்லப்பள்ளி சிறப்பு ரயில் (எண்: 07120) மறுநாள் பிற்பகல் 1.20 மணிக்கு சாா்லப்பள்ளி நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, செகுந்தராபாத், லிங்கம்பள்ளி, சங்கா்பள்ளி, விகாராபாத், தண்டூா், யாத்கிா், கிருஷ்ணா, ராய்ச்சூா், மந்தராலயம் சாலை, அடோனி, குண்டக்கல், கூட்டி,

தாடிபத்ரி, யெர்ரகுண்ட்லா, கடப்பா, ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கண்ணூா், காயன்குளம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் நூதன தண்டனை: அரசு மருத்துவமனை அவசர பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்ற சிறுவனுக்கு உத்தரவு

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு 3ஆவது நாளாக சிகிச்சை

சடை உடையாா் சாஸ்தா கோயில் புஷ்பாபிஷேக விழா

தூத்துக்குடியில் டிச. 13இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

அனைத்து துறை ஓய்வூதிய சங்க கூட்டம்

SCROLL FOR NEXT