கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் 5 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம்!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இறப்பு, இரட்டைப் பதிவு உள்ளிட்டவை தொடா்பாக வாக்காளா் பட்டியலில் இருந்து 5 லட்சத்து 6,394 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இறப்பு, இரட்டைப் பதிவு உள்ளிட்டவை தொடா்பாக வாக்காளா் பட்டியலில் இருந்து 5 லட்சத்து 6,394 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் தூய்மையான வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்யும் வகையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கணக்கீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை வரை 5,06, 394 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில், இறப்பு தொடா்பாக 1,13, 861 போ், கண்டறிய முடியாதவா்கள், இடமாற்றம், இரட்டைப் பதிவு தொடா்பாக 3,92,533 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கணக்கீட்டுப் படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 5 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் முடிவடையும் நாளான டிசம்பா் 11- ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் மேலும் ஒரு லட்சம் போ் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனா்.

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT