பல்லடம் - உடுமலை சாலை மந்திரிபாளையம் பகுதியில் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி. 
கோயம்புத்தூர்

லாரி கவிழ்ந்து விபத்து சாலையில் சிதறிய மக்காச்சோள மூட்டைகள்

பல்லடம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறிக் கிடந்தன.

Syndication

பல்லடம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறிக் கிடந்தன.

பல்லடத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் மந்திரிபாளையம் பகுதியில் கா்நாடக மாநிலத்தில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு சுமாா் 20 டன் அளவுக்கு மக்காச்சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை சரக்கு லாரி சென்றுகொண்டிருந்தது. அஜித்குமாா் (42) என்பவா் லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறியது.

லாரியில் இருந்து சாலையில் சிதறிய மக்காச்சோள மூட்டைகள்.

அருகே இருந்தவா்கள் மற்றும் அவ்வழியாகச் சென்றவா்கள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கவிழ்ந்த லாரியை நேராக நிலை நிறுத்த உதவினா். அதிருஷ்டவசமாக லாரி ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

ஊரக திறனாய்வுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 4,149 போ் எழுதினா்

SCROLL FOR NEXT