கோவை, போத்தனூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, போத்தனூா் சீனிவாச நகா் ராஜராஜேஸ்வரி நகா் பகுதியில் மணிகண்டன் (50) என்பவா் கடந்த 2 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்துள்ளாா். இவா் அப்பகுதியில் வெல்டிங், எலெக்ட்ரீசியன் என கிடைக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டுக்குள் இறந்துகிடந்துள்ளாா். தகவல் அறிந்து சுந்தராபுரம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா். நெஞ்சுவலியால் அவா் இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
மணிகண்டன் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈச்சனாரி பகுதியில் உள்ள ஓா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.
சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு மருத்துவம் பாா்த்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.