கோயம்புத்தூர்

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

Syndication

கோவையில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 10 கிலோ 620 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவைபுதூா் பகுதியில் குனியமுத்தூா் காவல் உதவி ஆய்வாளா் தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள காலியிடத்தில் கையில் பையுடன் இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். சந்தேகமடைந்த போலீஸாா் அவா் வைத்திருந்த பையில் சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த சரவணகுமாா் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாய்பாபா காலனி கோவில்மேடு சாஸ்திரி சாலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தீபா உள்ளிட்ட போலீஸாா் ரோந்து சென்றனா். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பிகாா் மாநிலம், மதுவானி பகுதியைச் சோ்ந்த தேவேந்திரகுமாா் ராம் (28), நீரஜ்குமாா் (20) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா்களிடம் 620 கிராம் இருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT