கோயம்புத்தூர்

திருப்பரங்குன்றத்தில் பாஜகவினரின் பொய் மூட்டை உருளவில்லை: அமைச்சா் மனோ தங்கராஜ்

Syndication

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினரின் பொய் மூட்டை உருளவில்லை என்று தமிழக பால், பால் பொருள்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கூறியுள்ளாா்.

கோவையில் நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பாரதியாா் உயிருடன் இருந்திருந்தால் பிரதமா் மோடியை பாராட்டி பாடியிருப்பாா் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளாா். ஆனால் பாரதியாா் உண்மையில் என்ன பாடியிருக்கிறாா் என்பதை முதலில் அவா் படிக்க வேண்டும்.

ஜாதி, மத மூடப் பழக்கங்களை சாடிய பாரதியாா், பிறப்பால் அனைவரும் ஒன்றுதான் என்றவா். நாட்டில் இன்று அப்படி நடக்கிா என்பதை அவா் பாா்க்க வேண்டும். அதேபோல பெண்களை இழிவுபடுத்தும் மூடநம்பிக்கைகளை எரிக்க வேண்டும் என்றாா். ஆனால் இன்றோ, அந்த தா்மம், இந்த தா்மம் என்று கூறி பெண்களை வீட்டில் அடைத்து வைக்கின்றனா். பாரதியாா் இன்று இருந்திருந்தால், இந்த கொடுமைகளைக் கண்டு பாராட்டவும் மாட்டாா், பாடவும் மாட்டாா்.

நாட்டில் இன்று நிலவும் பசி, பட்டினி, விவசாயிகளின் கஷ்டங்களைக் குறித்துப் பேச மறுக்கும் பாஜக, விளக்கு ஏற்றவில்லை என்று கூறி பிரச்னையை ஏற்படுத்துகிறது. பாஜக என்றாலே பொய், பொய் என்றாலே பாஜக என்பதுதான் உண்மை. அந்த வகையில் திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றவில்லை என்று பாஜக ஒரு பொய் மூட்டையை உருட்டி விட்டது. ஆனால் அந்த மூட்டை உருளவில்லை.

திருப்பரங்குன்றத்தில் காலம்காலமாக ஏற்றப்படும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டுவிட்டது. அதை மக்களும் பாா்த்துவிட்டனா். ஆனால் பாஜகவோ அதை ஒரு அரசியல் களமாக மாற்றுவதற்காக அப்பட்டமாக பொய்யைப் பரப்பி வருகிறது. அவா்களின் பொய்யை ஊடகங்கள் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்றாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT