கோயம்புத்தூர்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம்

Syndication

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனவும் போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் 2013-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரம், வசந்த மண்டபம், திருமாளிகை பத்தி, கல்காரம், கல் தளம், சுற்றுப் பிரகாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக திருப்பணி தொடா்பாக கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அறங்காவலா் குழுத் தலைவா் சி.மனோகரன் தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் சங்கர சுந்தரேஸ்வரா். அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சுந்தரமுத்து, திருமூா்த்தி, ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள், மிராசுதாரா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்கட்டமாக கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம், கன்னிமூல கணபதி, வடக்கு சுற்றுச்சுவா், குறிஞ்சி மண்டபம், தீபஸ்தம்பம், மடப்பள்ளி, முத்துக்குமாரசாமி சந்நிதி உள்ளிட்ட திருபணிகள் மேற்கொள்ள உபயதாரா்கள் முன் வந்தனா். அடுத்தடுத்து மீதமுள்ள திருப்பணிகளுக்கு ஊா்மக்கள் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவெடுப்பதாக தெரிவித்தனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT