பூசணி வகை காய்கறிகளில் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் செயல்முறைக்காக காப்புரிமை பெற்ற பேராசிரியா்களை பாராட்டும் வேளாண் பல்கலைக்கழகப் பதிவாளா் தமிழ்வேந்தன். 
கோயம்புத்தூர்

பழ ஈக்களை கட்டுப்படுத்தும் செயல்முறை: வேளாண் பல்கலை.க்கு காப்புரிமை

Syndication

பூசணி வகை காய்கறிகளில் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் செயல்முறைக்கான காப்புரிமை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ளது.

பூசணி வகை காய்கறிகளில் பழ ஈக்களைக் கவரும் நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மெதுவான வெளியீடு கொண்ட உருவகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பாகும். இதில் பழ ஈக்களைக் கவரும் வாசனை வேதிப்பொருள் மெதுவாக வெளியேறும்.

இது நுண்துளை அமைப்பில் செருகப்பட்டு மேம்பட்ட உருவாக்கத்துடன், அதிகநேரம் செயல்படவல்லது.

பூசணி விவசாயிகள் பழ ஈக்களினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீளுவதற்கு உதவக்கூடிய இந்தக் கண்டுபிடிப்புக்கான செயல்முறை காப்புரிமையை சென்னையில் உள்ள காப்புரிமை அலுவலகம் வழங்கியுள்ளது. இதற்காக பங்களிப்பு வழங்கிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் ம.கண்ணன் உள்ளிட்டோரை பதிவாளா் தமிழ்வேந்தன் பாராட்டியுள்ளாா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT