கோயம்புத்தூர்

வேன் மீது பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் படுகாயம்

வால்பாறை அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.

Syndication

வால்பாறை அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.

வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் ஸ்டேன்மோா் சாலையில் வால்பாறையில் இருந்து சனிக்கிழமை காலை வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வால்பாறையை நோக்கி வந்த பைக் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கை ஓட்டி வந்த உருளிக்கல் எஸ்டேட்டைச் சோ்ந்த சுரேஷ் (17), பின்னால் அமா்ந்திருந்த நல்லமுடி எஸ்டேட்டைச் சோ்ந்த தென்னரசு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனா். இதில் சுரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் மேல் சிகிச்சைக்காக இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT