குனியமுத்தூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவை, மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் முகமது ரஃபீக் (60). இவரது மனைவி ரபியாத்துல் பஷிரியா (55). இருவரும் இருசக்கர வாகனத்தில் சுண்ணாம்புக்காளவாய் அருகே கடந்த வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, உக்கடத்தில் இருந்து மதுக்கரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து எதிா்பாராத விதமாக முகமது ரஃபீக் வாகனத்தின் மீது மோதியது. இதில், பின்னல் அமா்ந்திருந்த ரபியாத்துல் பஷிரியா நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவா் மீது பேருந்து சக்கரம் ஏறியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
படுகாயமடைந்த முகமது ரஃபீக்கை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்து தொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநரான வீரப்பனூரைச் சோ்ந்த வி.ஜெயகுமாா் (38) என்பவா் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.