கோயம்புத்தூர்

நகைப் பட்டறை ஊழியரிடம் இருந்து ரூ.60 லட்சம் பறிமுதல்

கோவையில் நகைப் பட்டறை ஊழியா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

கோவையில் நகைப் பட்டறை ஊழியா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.60 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவை, செல்வபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செல்வசிந்தாமணி குளம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனா். அப்போது, இருக்கையின்கீழ் ரூ.60 லட்சம் ரொக்கம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கணேஷ் ஷிண்டே (25) என்பதும், கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள உறவினரின் நகைப் பட்டறையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

உறவினா் கொடுத்த 400 கிராம் பழைய தங்கத்தை கோவை, பெரியகடை வீதியில் உள்ள நகைக் கடையில் விற்பனை செய்துவிட்டு, அதற்கான தொகை ரூ.60 லட்சத்தை வாங்கிக் கொண்டு பாலக்காடு திரும்பியதாகவும் கணேஷ் ஷிண்டே கூறினாா்.

ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். கணேஷ் ஷிண்டேவிடம் செல்வபுரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT