முகப்பு
கோயம்புத்தூர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்நாளில் 3.52 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:24 AM
கோவை, கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகித்த பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:02 PM

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் 3.52 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழுக்கரும்பு அடங்கி இருக்கும் எனவும், இதை வாங்க பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதைத் தடுக்க வெள்ளிக்கிழமை முதல் ரேஷன் கடை ஊழியா்கள் டோக்கன் விநியோகிப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மொத்தம் 11 லட்சத்து 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 559 பேருக்கு (32 சதவீதம்) டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் மக்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.