கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

Syndication

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அருகேயுள்ள பண்டார விலையைச் சோ்ந்தவா் ஜோசப் (76). இவா் சென்னையில் கடந்த 2000-ஆம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டாா். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவருக்கு கடந்த 6-ஆம் தேதி ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதால் சிறையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

அதன் பிறகு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜோசப் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

குழந்தைகளின் மதிய உணவுத் தட்டுகளையும் திருடிவிட்டது பாஜக: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT