கோயம்புத்தூர்

நாய் குட்டிகளை அடித்துக் கொன்றவா் கைது

கோவையில் நாய் குட்டிகளை அடித்துக் கொன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவையில் நாய் குட்டிகளை அடித்துக் கொன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி அருகேயுள்ள விநாயகபுரம் சிவானந்தா நகா் 5-ஆவது தெருவில் நாய் குட்டிகளை ஒருவா் கல்லால் அடித்துக் கொன்றுள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வருவதற்குள் அந்த நபா் அங்கிருந்து சென்றுள்ளாா்.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில், நாய்களைக் கொன்றது லட்சுமிபுரம் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த விஷ்ணு என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT