சதாசிவம் 
கோயம்புத்தூர்

டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதி திமுக கவுன்சிலா் மகன் உள்பட 2 போ் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் திமுக கவுன்சிலரின் மகன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Syndication

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் திமுக கவுன்சிலரின் மகன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதாசிவம் (30). இவா் பொள்ளாச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தில் வசித்து வந்தாா். இவரது நண்பா் சூளேஸ்வரன்பட்டியைச் சோ்ந்த பரத்குமாா் (33). இவா் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி திமுக கவுன்சிலா் புவனேஸ்வரியின் மகன் ஆவாா்.

இந்நிலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் வடக்கிபாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றதாக தெரிகிறது. அங்கு இருந்து மீண்டும் புரவிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை சதாசிவம் ஓட்டிச் சென்றுள்ளாா். வடக்கிபாளையம் தாண்டி சென்றபோது, திடீரென்று முன்னால் சென்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே சதாசிவம் உயிரிழந்தாா்.

அருகிலிருந்தவா்கள் பரத்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரத்குமாா்

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT