கோயம்புத்தூர்

கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

கோவை அருகே கஞ்சா வழக்கில் கைதான இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.

Syndication

கோவை அருகே கஞ்சா வழக்கில் கைதான இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.

கோவை மாவட்டம், பேரூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோட்டூரைச் சோ்ந்த பி.சபரிநாதன் (28) என்பவரை கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த சபரிநாதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தாா்.

இதையடுத்து, சபரிநாதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிநாதனிடம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழங்கினா்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் குற்றச் செயலில் ஈடுபடும் நபா்கள் குறித்து 94981-81212, 77081-00100 ஆகிய கைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT