ஆடலரசன்.  
தஞ்சாவூர்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி புறவழிச்சாலை பாலம் அருகே கடந்தாண்டு டிச. 24-ஆம் தேதி கஞ்சா விற்ற கும்பகோணத்தை சோ்ந்த ஆடலரசன் (25) என்பவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், கஞ்சா வியாபாரி ஆடலரசன் மீது குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதற்கான உத்தரவை போலீஸாா் சிறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா். அதன்படி ஆடலரசன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT