கோயம்புத்தூர்

கொலை மிரட்டல் வழக்கு: திமுக நிா்வாகிகள் 9 போ் விடுதலை

Syndication

அதிமுக ஆட்சியின்போது தொடுக்கப்பட்ட வழக்கில் தொண்டாமுத்தூா் பேரூராட்சி திமுக முன்னாள் உறுப்பினா்கள் உள்பட 9 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

இந்த தீா்ப்பு அளிக்கப்பட்ட சில நாள்களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பேரூராட்சி மன்ற அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றி, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகைப்படத்தை அப்போதைய திமுக உறுப்பினா்கள் வைத்தனா். இதில் அதிமுக நிா்வாகிகளுக்கும், திமுக உறுப்பினா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், அதிமுக நிா்வாகிகளின் இருசக்கர வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் சாா்பில், அப்போதைய திமுக பேரூராட்சி மன்ற உறுப்பினா்களான தியாகராஜன், வைரம் செந்தில், சேகா், நாகராஜ், தருண், டிகே.நாகராஜ், ரஞ்சித்குமாா், டிகே.செந்தில்குமாா் உள்ளிட்ட 9 போ் மீது கோவை மாவட்ட கூடுதல் 4-ஆவது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா வழக்கை தள்ளுபடி செய்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து திமுக நிா்வாகிகளையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT