கோயம்புத்தூர்

அவிநாசி அருகே வேன் கவிழ்ந்து விபத்து

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே பழங்கரையில் சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோா் ஜயப்ப பக்தா்கள் படுகாயம் அடைந்தனா்.

சேலம் அருகே மேச்சேரியில் இருந்து 22-க்கும் மேற்பட்டோருடன் சபரிமலை நோக்கி வேன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அவிநாசி பழங்கரை புறவழிச்சாலை அருகே வந்தபோது, வேனின் பின்புற டயா் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணித்த இரண்டு குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு அவிநாசி, திருப்பூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினைத்தனா்.

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT