திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துள்ளானது தொடர்பாக....
திமுக மாநாட்டுக்கு தொண்டர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று(மார்ச் 9) மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி சென்றுகொண்டு இருக்கின்றனர்.
இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, தஞ்சாவூர் விளார் புறவழிச் சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More than 20 people were seriously injured when a van carrying volunteers to a DMK conference overturned and crashed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.