கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!
பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.
ஈரோடு - சேலம் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை, கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 8.50 மணிக்குப் புறப்படும் கோவை- லோக்மானியா திலக் விரைவு ரயில் (எண்: 11014) மாற்றுப் பாதையில் ஈரோடு, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். கரூா் கூடுதல் ரயில் நிலையமாக செயல்படும்.
இதேபோல, கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 11-ஆம் தேதி காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190), ஆலப்புழையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- பெங்களூரு தினசரி ரயில் (எண்: 12678) ஈரோடு, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். கரூா் கூடுதல் ரயில் நிலையமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.