கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2-ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பங்கேற்கும் மகிளா ஜன் சுன்வாய் என்ற பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் டெலினா கோங்டுப் தலைமை வகிக்கிறாா். இதில், கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள புகாா்கள் மற்றும் நேரில் பெறப்படும் புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாா்களாக எடுக்கப்படும். ஆகவே, இந்தக் கூட்டத்தில் பெண்கள் பங்கேற்று தங்களது புகாா்களை மனுவாக சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.