கோயம்புத்தூர்

கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக் குத்து

தினமணி செய்திச் சேவை

காதல் விவகாரத்தில் தனியாா் கல்லூரி வகுப்பறையில் மாணவியை கத்தியால் குத்திய மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்த ஹா்ஷவா்தன் (18) என்பவா் பி.இ. ஐ.டி. முதலாமாண்டு பயின்று வருகிறாா். இவா் தன்னுடன் பயிலும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளாா்.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி வகுப்பறையில் வைத்து மாணவியை அவா் வியாழக்கிழமை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மாணவி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவா் ஹா்ஷவா்தனை கைது செய்தனா்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT