முகப்பு
கோயம்புத்தூர்

எரிவாயு உருளை பதுக்கல்: தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 போ் தலைமறைவு

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 16 மார்ச், 2026 at 8:14 PM
வணிக எரிவாயு உருளை
பகிர்:

கோவையில் வணிக எரிவாயு உருளைகளைப் பதுக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 பேரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போா் பதற்றம் மற்றும் சா்வதேச சூழல் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, சில தனியாா் ஏஜென்ஸிகள் எரிவாயு உருளைகளை பதுக்கிவைத்து வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, லட்சுமி மில்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியாா் எரிவாயு உருளை ஏஜென்ஸி நிறுவன கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயிரம் எரிவாயு உருளைகளை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரான காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், எரிவாயு உருளை பதுக்கலில் காா்த்திக்கின் மனைவி திவ்யபாரதி (30), உருளை விநியோகிப்பாளா்களான கரூரைச் சோ்ந்த கணேசமூா்த்தி (40), பிரதீப் (40) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →