கோயம்புத்தூர்

தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் ஓடந்துறை ஊராட்சியில் 101 பசுமை வீடுகள்

தினமணி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை ஊராட்சியில் ரூ. 2.12 கோடி மதிப்பில் சூரிய ஒளியுடன் கூடிய 101 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக தமிழகத்திலேயே ஒரே இடத்தில் அதிக என்ணிக்கையில் பசுமை வீடுகளை கொண்ட ஊராட்சி என்ற பெருமையை ஓடந்துறை பெற்றுள்ளது.

இது குறித்து ஊராட்சித் தலைவர் லிங்கம்மாள் சண்முகம் கூறியது:

தமிழகத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் வீடுகள் இல்லா ஏழைகளுக்கு வீடுகள் வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஓடந்துறை ஊராட்சி  வினோபாஜி நகரில் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையாக 101 பசுமை வீடுகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட இத்திட்டப் பணிகளில் தற்போது பசுமை வீடுகளுக்கான வடிகால், கான்கிரீட் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ஜூன் மாத இறுதிக்குள் இந்த வீடுகள் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும்.

ஓடந்துறை ஊராட்சியில் ராஜீவ் காந்தி குடிநீர் திட்டம், தொகுப்பு வீடுகள் திட்டம், சோலார் தெருவிளக்குகள், காற்றாலை திட்டம், அனைத்து வீதிகளிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எல்இடி விளக்குகள் திட்டம் போன்றவை சிறப்பாக  செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் மாதிரி ஊராட்சியாக ஓடந்துறை விளங்கி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT