கோயம்புத்தூர்

நவீன கால் மூட்டு ஜவ்வு சீரமைப்பு குறித்த கருத்தரங்கு

DIN

ஆர்தோ ஒன் மருத்துவமனை சார்பில் லாப்பிராஸ்கோப்பி மூலம் நவீன கால் மூட்டு ஜவ்வு சீரமைப்பு சிகிச்சை குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டேவிட் ராஜன், துபை யூரோ ஸ்பைனல் மருத்துவமனையின் முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஸ்கல் கிறிஸ்டெல் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

விபத்து, விளையாட்டில் உள்ளிட்ட காரணங்களால் கால் மூட்டுக்கு இடையே உள்ள ஜவ்வு பாதிக்கப்படும். அதற்கு மூட்டுப் பகுதியில் திறந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஜவ்வு சீரமைக்கப்படும்.

ஆனால், தற்போது லாப்பிராஸ்கோப்பி மூலம் மூட்டு ஜவ்வை சீரமைக்க நவீன சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், திறந்த நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் லாப்பிராஸ்கோப்பி மூலம் உடலின் பிற பகுதியில் உள்ள ஜவ்வை கொண்டு பாதிக்கப்பட்ட மூட்டு பகுதியில் கிராப்டிங் முறையில் ஜவ்வைப் பொருத்தி வளரச் செய்யும் முறையாகும். இதன் மூலம் ஒரு சில நாள்களில் பாதிக்கப்பட்டவர் குணமடைவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT