கோயம்புத்தூர்

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

DIN

கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 தொடர்ந்து, நாள்தோறும் அதிகாலை யாக சாலை பூஜைகளும், இரவு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். ஏப்ரல் 5-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.    
 விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வானது ஏப்ரல் 6-ஆம் தேதி பிற்பகல் 3.15-க்கு நடைபெறுகிறது. ஏப்ரல் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழாவும், 9-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கொடியிறக்குதலுடனும் திருவிழா நிறைவடைகிறது.
 இந்தக் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் உதவி ஆணையர் என்.சரவணன், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT