கோயம்புத்தூர்

வால்பாறை பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

மலையாள மொழி வழியில் கல்வி பயின்ற ஆசிரியர் ஒருவருக்குப் பதவி உயர்வு வழங்கியதைக் கண்டித்து வால்பாறையில் ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை வட்டாரத்தில் உள்ள முருகாளி நடுநிலைப் பள்ளி முற்றிலும் தமிழ் வழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளியாகும். தொடக்கக்கல்வி முதல் பட்டயக் கல்வி வரை சிறுபான்மை மொழியாக மலையாள மொழி வழியில் கல்வி பயின்றவருக்கு இப்பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வால்பாறை உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம்  முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணித் தலைவர் கென்னடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT