கோயம்புத்தூர்

டேன்டீ தொழிலாளர்களுக்கு இன்று புதிய சம்பளம்

DIN

டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த புதிய சம்பளம் வியாழக்கிழமை (டிசம்பர் 7) வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ. 286.53  வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. இதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு  புதிய குறைந்தபட்ச கூலி கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. 
ஆனால்,  தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு புதிய சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அத்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக  அறிவிப்பு வெளியிட்டனர். 
இந்நிலையில்,  புதிய சம்பளம் வழங்குவதற்கான உத்தரவு தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளது என்றும்,  டேன்டீ தொழிலாளர்களுக்கு புதிய சம்பளமாக அகவிலைப்படியுடன் ரூ.291.30  வியாழக்கிழமை வழங்க இருப்பதாக டேன்டீ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT