கோயம்புத்தூர்

வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

DIN

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வால்பாறை பகுதியில் இரவு நேரத்தில் மட்டும் வனத்தைவிட்டு வெளியேறும் யானைகள், தற்போது பகல் நேரங்களிலும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அய்யர்பாடி எஸ்டேட் பகுதிக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள், தொழிலாளர்களின் குடியிருப்புகள், ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின. இதேபோல், சின்கோனா எஸ்டேட் பகுதியில் உள்ள லாசன் தேயிலைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புகுந்து யானைக் கூட்டத்தை அப்பகுதி மக்களும், வனத் துறையினரும் விரட்டினர்.
வனத் துறையினர் இரவு நேரத்திலும் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT