கோயம்புத்தூர்

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கியது.

DIN

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கியது.
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்தத் தேர்வுகளை கோவையில் 24,500 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகின. இதில்,  கோவை மாவட்டத்தில் 550 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது.
டவுன்ஹால் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் தொடங்கிய இந்தப் பணியில் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
 இதில், பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ்கள்,  பட்டச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 12 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. முதல் நாளில் 200 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில்  மீதமுள்ளவர்களுக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா்: சிறப்பு முகாம்கள் மூலம் 18,935 மனுக்கள்

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

SCROLL FOR NEXT