கோயம்புத்தூர்

அடிப்படை வசதிகள் கோரி பொது மக்கள் சாலை மறியல்

DIN

சூலூர் அருகே குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூலூர் அருகே, பாப்பம்பட்டி ஊராட்சியில் மாதத்தில் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள சாக்கடையைச் சுத்தம் செய்வதில்லை. இதனால் ஏற்படும் சுகாதராச் சீர்கேடால் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் உயிரிழந்து விட்டனராம்.
எனவே, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரக் கோரி இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT