கோயம்புத்தூர்

ரஜினி மட்டுமே பாஜகவுக்குப் பலம் அல்ல

DIN

பாஜகவின் கொள்கையுடன் ஒத்துப்போவதால் ரஜினிகாந்த் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அதேநேரம் ரஜினிகாந்த் மட்டுமே பாஜகவுக்குப் பலம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் குறித்துப் பேசி வருகிறார். எங்களைப் போலவே அவருக்கும் ஆண்டவன் மீது நம்பிக்கை இருக்கிறது. பாஜகவின் கருத்தோடு ஒத்துப்போகக் கூடியவர் என்பதால் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம். ஆனால், ரஜினி மட்டுமே பாஜகவுக்குப் பலம் என்றால் அதை ஒத்துக்கொள்ள மாட்டோம்.
மத்திய பாஜக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் மாநிலம் முழுவதிலும் மே 25முதல் ஜூன் 15வரை நடைபெறுகிறது. இதற்காக மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழகத்துக்கு வருகின்றனர்.
மதுக் கடைகளுக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் போலீஸாரை கண்டித்து ஜூன் 16இல் சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தத் தொடங்கிய பிறகே அதிக அளவில் ஊழல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், மதுக் கடைகளை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திறந்து, கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுகிறது. கருப்புப் பணம் அதிகரிக்கக் காரணமாக இருந்த ப.சிதம்பரம், கருப்புப் பண ஒழிப்பு குறித்துப் பேசுவது சரியானது அல்ல.
நீட் தேர்வு குறித்து தவறான தகவலை கனிமொழி பரப்பி வருகிறார். மத்திய அரசின் திட்டத்தால்தான், மருத்துவ உயர் படிப்பு இடங்கள் 50 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT