கோயம்புத்தூர்

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

சூலூர் அருகே பாரதிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சூலூர் அருகே பாரதிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 16-ஆம் தேதி பூச்சாட்டுதல், 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) கம்பம் நடுதல், 23-ஆம் தேதி அம்மன் ஆபரணம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. நொய்யல் ஆற்றிலிருந்து அம்மன் கரகம் புதன்கிழமை அழைத்து வரப்பட்டது. பக்தர்கள் பூவோடு, பால் குடம் எடுத்துவந்து வழிபட்டனர். அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை, தீர்த்தக் குடம், மாவிளக்கு, முளைப்பாரிகை  ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் நாளை எஸ்ஐஆர் விவாதம்! ராகுல் தொடக்கி வைக்கிறார்!

போதிய ஆதாரம் இல்லை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

புதுச்சேரி மக்கள் சந்திப்பு வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT