வன்கொடுமை வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்: துணைவேந்தர் ஆ.கணபதி
என் மீது போடப்பட்டுள்ள வன்கொடுமை வழக்கை சட்டரீதியாத எதிர்கொள்வேன் என்று பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி தெரிவித்துள்ளார்.
என் மீது போடப்பட்டுள்ள வன்கொடுமை வழக்கை சட்டரீதியாத எதிர்கொள்வேன் என்று பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சென்னைக்கு வழியனுப்பி வைப்பதற்காக, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கணபதி புதன்கிழமை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மீதான வன்கொடுமை வழக்கைச் சட்டரீதியில் எதிர்கொள்வேன். எனக்கு எதிரான வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், லட்சுமி பிரபா சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஆட்சிமன்றக் குழுவும், பல்கலைக்கழக நிர்வாகக் குழுவும் இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையிலேயே பேராசிரியர் தேர்வு நடைபெற்றது என்றார்.