கோயம்புத்தூர்

ராயல் கேர் மருத்துவமனை சார்பில் இருதய பரிசோதனை முகாம்

DIN

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தவறான உணவுப் பழக்கம்,  வாழ்க்கை முறை காரணமாக இருதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை சார்பில் இருதயப் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நீலாம்பூர் மருத்துவமனை வளாகத்திலும்,  டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள நகர கிளையிலும் நடத்தப்படுகின்றன. இதில், இ.சி.ஜி., எக்கோ ஸ்கேன், டி.எம்.டி. பரிசோதனைகள் ரூ. 2,500-க்கும்,  ஆஞ்சியோகிராம் தேவைப்படுபவர்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்திலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு முகாம்கள் வரும் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். மருத்துவர்கள் கே.சொக்கலிங்கம், ஆர்.சந்திரமோகன், ஜி.ராம்ராஜ், பி.அருண்குமார் அடங்கிய மருத்துவக் குழுவினர் இந்த முகாமை நடத்துகின்றனர்.
 இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு நீலாம்பூர் - 0422 - 222 7100, நஞ்சப்பா சாலை - 0422 - 400 1003 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT