முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

கோவையை அடுத்த க.க.சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கலை,  அறிவியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

கோவையை அடுத்த க.க.சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கலை,  அறிவியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

கோவையை அடுத்த க.க.சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கலை,  அறிவியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியைக் கல்லூரி முதல்வர் சுரேந்திரன் தொடக்கி வைத்தார். கோவை,  கேரள மாநிலம்,  பாலக்காட்டில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த  மாணவ,  மாணவிகள் தங்கள் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.  இதில், மூத்தோர் பிரிவில் மணி உயர்நிலைப் பள்ளி முதலிடமும் , கே.பி.எம். பள்ளி இரண்டாம் இடமும்,  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தது. இளையோர் பிரிவில் கிணத்துக்கடவு அரசுப் பள்ளி முதலிடமும்,  பச்சாபாளையம் கே.ஜி.பள்ளி இரண்டாம் இடமும், பி.என்.புதூர் மாநகராட்சிப் பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன.  வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்குப் பரிசு,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →