கோயம்புத்தூர்

தூய்மைப் பணியில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவர்கள்

DIN

வால்பாறை தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
வால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம், தேசியப் பசுமைப் படை,  சாரண,  சாரணியர் இயக்கம்,  இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தொடக்க விழா பள்ளி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்குப் பள்ளி முதல்வர் கவிதா தலைமை வகித்தார். மானாம்பள்ளி வனச் சரகர் சேகர் கலந்து கொண்டு பசுமைத் திட்டங்கள் குறித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து,  வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தபால் நிலையம் வரை சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகளை பள்ளி மாணவர்கள் அகற்றினர். மேலும், சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT