கோயம்புத்தூர்

விலையில்லா ஆடுகள் தேர்வில் முறைகேடு? கிராம மக்கள் சாலை மறியல்

DIN

சூலூர் அருகே விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்,  மகளிர் கூட்டமைப்பின் தலைவர் ஜெயமணி,  அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஆனால்,  இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விலையில்லா ஆடுகளுக்கான பயனானிகள் தேர்வில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், செலக்கரச்சல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த  சூலூர் காவல் உதவி ஆய்வாளர் ரவீந்திரன் மறியலில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இதுதொடர்பாக  வரும் வெள்ளிக்கிழமை சிறப்புக் கூட்டம் கூட்டி விலையில்லா ஆடுகள் பெரும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும்,  அதில்,  தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT