கோயம்புத்தூர்

போனஸ் தொகையை 40 சதவீதமாக வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

இந்த ஆண்டுக்கான போனஸ் தொகையை 40 சதவீதமாக உயர்த்தி ஒரே தவணையாக வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கோவையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனத் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார்.
இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் மூலமாக அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருவதால் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் பல்வேறு இலவச திட்டங்களுக்கு பேருதவியாக உள்ள இந்த டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையோ மிகவும் பின்தங்கி உள்ளது.
எனவே, டாஸ்மாக் ஊழியர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும். வார விடுமுறை, தேசிய விடுமுறை அளிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான போனஸ் தொகையை 40 சதவீதமாக உயர்த்தி ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜான்அந்தோணிராஜ், மாவட்டப் பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சம்மேளனக்குழு உறுப்பினர் செந்தில்பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT