கோயம்புத்தூர்

காட்டெருமை தாக்கி 3 பெண்கள் காயம்

DIN

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் 3 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வால்பாறையை அடுத்த ஆனைமுடி எஸ்டேட்டில்  திங்கள்கிழமை காலை தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  அருகில் உள்ள வனப் பகுதிக்குள் இருந்து திடீரென  ஓடிவந்த  காட்டெருமை தொழிலாளர்களர்கள் நோக்கிச் சென்றது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் பலரும் அலறிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், 
அங்கிருந்து ஓட முடியாமல் தவித்த  ஞானம்பாள் (57),  மகாலட்சுமி  (55),  நெபிசா (51) ஆகிய மூன்று தொழிலாளர்களை காட்டெருமை முட்டி தள்ளியது.  இதில்,  காயமடைந்த மூன்று பேரும்  முடீஸ் குழும மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களை வனத் துறையினர், அதிமுக தொழிற்சங்கத்  தலைவர் வி.அமீது ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT