முகப்பு
கோயம்புத்தூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

கோவை மாவட்டம், நெகமம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கோவை மாவட்டம், நெகமம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை-சீயந்தாள்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி (48). இவர் நெகமத்தை அடுத்த வதம்பச்சேரியில் நவமணி என்பவரின் வீடு புதுப்பிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.  
இந்நிலையில்,  வீட்டின் மேற்கூரையில் ஈரப்பதம் உள்ள மரக்கட்டை மீது சனிக்கிழமை உறங்கியுள்ளார்.  அப்போது, வீட்டின் அருகில் சென்ற மின்கம்பியில் ஈரப்பதம் உள்ள மரம் பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து கண்ணுசாமி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →