ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு
கருமத்தம்பட்டி அருகே கோதைபாளையத்தில் உஜ்வலா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கருமத்தம்பட்டி அருகே கோதைபாளையத்தில் உஜ்வலா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சூலூர் ஒன்றிய பாஜக தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் எம்.நடராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட நெசவாளர் அணித் தலைவர் நடராஜ் வரவேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 32 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கினார். விழாவில் 7 பேருக்கு முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில், கட்சியின் கோவை வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.பி.மோகன் மந்திராசலம், மாவட்ட துணைத் தலைவர் எம்.கோபால்சாமி மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, திருப்பூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் ஆர்.எம் சுப்பிரமனியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சூலூர் ஒன்றிய இளைஞரணித் தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.