கோயம்புத்தூர்

இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி கிராம சபை  கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு

DIN

சுதந்திர தினத்தையொட்டி கோவை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், இக்கரை போளுவாம்பட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு பேசியதாவது:
ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. 
இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 குடிநீர் பணிகளும், ரூ.34 லட்சம் மதிப்பில் 3 சாலைப் பணிகளும், ரூ.23 லட்சத்தில் 6 கழிவுநீர் வடிகால் பணிகளும், ரூ.51 லட்சத்தில் வெள்ளத் தடுப்புச் சுவர்களும், ரூ.53 லட்சத்தில் தெருவிளக்கு பணிகளும், ரூ.95 லட்சத்தில் கட்டடப் பணிகளும் என மொத்தம் ரூ.3.47 கோடி மதிப்பில் 36 பணிகள் தாய்த் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், பயிற்சி ஆட்சியர் சிநேகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, செயற்பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT