கோயம்புத்தூர்

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு

DIN

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங் ஷாமி புதன்கிழமை ஆய்வு செய்தார். 
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டு பயணச்சீட்டு வழங்கும் இடத்தில், ஒன்று 24 மணிநேரம் செயல்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யப்படும் மற்றொரு இடத்தில் காலை 8 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுவருகிறது. இதனால், பயணிகள் பயணச்சீட்டு பெறுவதில் சிரமம் இருந்துவருகிறது. 
இதுதவிர அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி குறைபாடு போன்ற பிரச்னைகள் குறித்து புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங் ஷாமி பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தார். பயணச்சீட்டு வழங்குமிடத்தை ஆய்வுசெய்த பின், முன்பதிவு மட்டும் செய்யப்படும் கவுன்டரில் இனி முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளையும் வழங்க உத்தரவிட்டார். 
இதையடுத்து கிணத்துக்கடவு ரயில் நிலையம், முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகளை பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT