முகப்பு
கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்த தையல் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

உடல்நலக் குறைவால் மூளைச்சாவு அடைந்த திருப்பூர் தையல் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலாமாக 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

உடல்நலக் குறைவால் மூளைச்சாவு அடைந்த திருப்பூர் தையல் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலாமாக 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி மாரியப்பன் (28). இவர், இதய நோயால் பாதிக்கப்பட்டு 2015-இல் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில்,  கடந்த ஜனவரி 29-ஆம் தேதி  மாரியப்பனுக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்பட்டதாம். உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சுயநினைவு இழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை கே.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், மாரியப்பன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அவரது உடலில் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →