கோயம்புத்தூர்

தடையை மீறி ஊர்வலம்:  இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது

DIN

கோவையில் தடையை மீறி ஊர்வலமாக சென்ற இந்து மக்கள் கட்சியினர் (தமிழகம்) 50 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
கோவையில் 1998-ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இந்த ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. எனினும், அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 இதையடுத்து, அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்றதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50 பேரை ஆர்.எஸ்.புரம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT