முகப்பு
கோயம்புத்தூர்

தீ விபத்தில் எஸ்டேட் குடியிருப்பு சேதம்

வால்பாறை அருகே எஸ்டேட் குடியிப்பில்  நிகழ்ந்த தீ விபத்தில் பணம், நகை, வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

வால்பாறை அருகே எஸ்டேட் குடியிப்பில்  நிகழ்ந்த தீ விபத்தில் பணம், நகை, வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
      வால்பாறையை அடுத்த ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் பணியாற்றுபவர் மேத்யு. இவர் தனது குடும்பத்தாருடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு ஒரு மணி அளவில்  திடீரென வீட்டில் தீப்பற்றி எரிந்துள்ளது.  இதைப் பார்த்ததும் உடனே மேத்யு தனது மனைவி, மகனுடன் அங்கிருந்து வெளியேறினார். அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த பக்கத்துவீட்டார் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
     இது குறித்து தகவல் தெரிவித்தும்கூட தீயணைப்பு வாகனம் வருவதில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் வருவதற்குள் தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.40 ஆயிரம்,  5 பவுன் நகை, வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின.  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →