கோயம்புத்தூர்

சீமா நிறுவனத்துக்கு தேசிய அங்கீகாரம்

DIN

கோவையைச் சேர்ந்த தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு (சீமா) தேசிய அளவிலான தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் கே.கே.ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 இந்திய தர நிர்ணயக் குழுவின் துணை நிறுவனமான தேசிய கல்வி, பயிற்சி அங்கீகார சான்றளிப்பு நிறுவனம்,  மத்திய அரசின் வர்த்தக தொழில் துறை, தொழிலாளர்,  வேலைவாய்ப்புத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் துணையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் வர்த்தக, தொழில் அமைப்புகளுக்கு சிறந்த அங்கத்தினர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான தர அங்கீகாரத்தை, வெள்ளி, தங்கம், வைரம் என்ற பிரிவுகளில் வழங்கி வருகிறது.
 நிறுவனங்களுக்கான திட்டம், செயல்பாடு, சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சான்று வழங்கப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு தங்கத் தர அங்கீகாரம் வழங்குவதாக தேசிய கல்வி, பயிற்சிக்கு அங்கீகாரம் வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அங்கீகாரம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
 இதன் மூலம், சீமாவுக்கு தரம், தகுதிக்கான ஹால்மார்க் குறியீடு, வெளிநாட்டு வர்த்தக முகவர்களுடன் இணைப்பு உருவாக்கம், குறைந்த வட்டி விகிதத்தில் உறுப்பினர்களுக்கு கடன் கிடைப்பது உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்க இருப்பதாக ராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT