இந்தியாவில் நதிநீர் இணைப்பை அவசியம் செயல்படுத்தவேண்டும்: சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன்
இந்தியாவில் நதிநீர் இணைப்பை அவசியம் செயல்படுத்தவேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்தியாவில் நதிநீர் இணைப்பை அவசியம் செயல்படுத்தவேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் வேதாத்திரிய வேள்வி தினம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆழியாறு அறிவுத்திருக்கோயில் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் கருத்துரை வழங்கினார்.
இதில் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் உள்பட 7 பேரும், தண்டனைக் காலத்தில் எந்த குற்றமும் செய்யாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்யும் அனைவரின் கருத்துக்கு நான் மறுப்பு தெரிவிக்கமாட்டேன். இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நதிகள் இணைப்பை செயல்படுத்துவதில்லை. நாடு வறட்சி அடைந்து பாலைவனமாகி தண்ணீருக்காக வன்முறை வெடிக்கும். அரசியல் உறுதிப்பாடு உள்ள தலைவர்கள் இருந்தால் மட்டுமே நதிகள் இணைக்கும் திட்டம் சாத்தியமாகும். கால்நடைகளுக்குத் தண்ணீர், தீவனம் இல்லாததால் கால்நடைகளை விற்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் நதிநீர் இணைப்பு கடினமான ஒன்றுதான். நதிநீர் இணைப்பை செயல்படுத்த பிரதமர் மோடியால்தான் முடியும். நதிநீர் இணைப்பு என்பது முக்கியமான ஒன்றாகும் என்றார்.